டிக்கெட் பரிசோதகர் தற்கொலை

டிக்கெட் பரிசோதகர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-03-10 17:44 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே உள்ள கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 53). தனியார் பஸ்சில் டிக்கெட் பரிேசாதகராக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு முருகன் பயணிகளிடம் பயணச்சீட்டை சோதனை செய்ததில் சில தவறுகள் இருந்ததாகவும், இதனால் அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த முருகன் நேற்று முன்தினம் கோட்டை கிராமத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்