தென்னையை தாக்கும் புது வகை நோய்
பொங்கலூர் பகுதியில் தென்னையை தாக்கும் புது வகை நோயால் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொங்கலூர்
பொங்கலூர் பகுதியில் தென்னையை தாக்கும் புது வகை நோயால் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீரிய ஒட்டு ரக தென்னை
பொங்கலூர் பகுதியில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலங்களில் நாட்டு ரக தென்னை ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். ஆனால் தற்போது அதிக உற்பத்தி, குறைந்த காலத்தில் அறுவடைக்கு தயாராகும் நிலை ஆகியவற்றால் வீரிய ஒட்டு ரக தென்னைகளை தற்போது விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.
ஆனால் நாட்டு தென்னை மரங்களை விட வீரிய ஒட்டு ரக தென்னை மரங்கள் நோய் தாக்குதலுக்கு அதிக அளவில் ஆளாகி வருகிறது. இதனால் அடிக்கடி நோய் தாக்குதலால் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை மரங்கள் அதிக உயரத்தில் இருப்பதால் மருந்து தெளிப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயமாக உள்ளது.
மருந்துகள் பயன்படுத்துதல்
எனவே வேர்ப்பகுதியில் இருந்து மட்டுமே தென்னைக்கு தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக தென்னை மரங்களில் துளையிட்டு மருந்துகள் செலுத்துவதும், வேர் பகுதியில் மருந்துகள் செலுத்தி நோயை கட்டுப்படுத்துவதிலும் விவசாயிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
ஆனால் அவ்வாறு வேர் பகுதியில் மருந்துகளை செலுத்தி நோயை கட்டுப்படுத்தும் முறைகளால் இளநீரை வாங்கி பயன்படுத்தும் பொது மக்களுக்கு பல்வேறு விதமான நோய் பாதிப்புகள் உண்டாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.