முல்லைப்பெரியாற்றில் பெண் பிணம்

வீரபாண்டி அருகே முல்லைப்பெரியாற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதந்தார்.

Update: 2022-03-10 17:25 GMT
உப்புக்கோட்டை: 

வீரபாண்டி அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று மிதந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். 

இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்