பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:-
நாகையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் ராஜன் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அசோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜன் கலந்து கொண்டு பேசினார். உயர்த்தப்பட்ட பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கிளை பொருளாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.