பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பேரணி
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்துவது குறித்து பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொள்ளாச்சி
ஒருங்கிணைந்த பள்ளி, கல்வி பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் உள்ளடக்கிய கல்வியில் படிக்கும் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதை வட்டார கல்வி அலுவலர் பூங்கோதை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெற்கு ஒன்றிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) காயத்ரி, ஒருங்கிணைப்பாளர் கலைசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் வி.ஆர்.ஐ. பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி சென்றனர்.
வி.ஆர்.ஐ. பள்ளியில் இருந்து தெற்கு வட்டார வள மையம் வரை ஊர்வலமாக வந்தனர். இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் கார்மல்மேரி, முகிலன், மோகனம்மாள் ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.