விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் பயிற்சி

சுல்தான்பேட்டையில் விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.

Update: 2022-03-10 16:16 GMT
சுல்தான்பேட்டை

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள், கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் சுல்தான்பேட்டையில் கடந்த சில நாட்களாக தங்கி, ஒன்றியத்தை சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று வேளாண் பயிற்சி அளித்து வருகின்றனர். 

இதில், ஒரு பகுதியாக, கம்மாளப்பட்டி கிராமத்தில் ஊரக பங்கேற்பு மதிப்பீடு (கிராம வரைபடம்) குறித்தும் அதன் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு மாணவ-மாணவிகள் விளக்கம் அளித்தனர். இதில், அந்த கிராமத்தை பற்றிய சமூக வரைபடம், வளங்கள் வரைபடம், பயிர் அட்டவணை, கால அட்டவணை, வெண் வரைபடம் வரைந்து காட்டினர். 

இந்த நிகழ்ச்சியில், விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்று அதன் பயன்களை தெரிந்து கொண்டனர். மாணவிகளின் கிராம புறதங்கல் திட்டத்தின் செயல்பாடுகளை சுல்தான்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜயகல்பனா, தோட்டகலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்