மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது

தட்டார்மடத்தில் மது பாட்டில்களை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-10 15:35 GMT
சாத்தான்குளம்:
தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் தலைமையிலான போலீசார் பெரியதாழை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கல்லறை தோட்டம் அருகில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக பெரியதாழை மேலத்தெரு குழந்தை இயேசு காலனியைச் சேர்ந்த பிலாயூஸ் மகன் எல்ஜியூஸ் (வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்