எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பும் ஊழியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பும் ஊழியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-10 15:25 GMT

கோவை

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதன் ஒருபகுதியாக எல்.ஐ.சி. ஊழியர்கள் கோவையில் உள்ள அனைத்து எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பும் ஊழியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை-அவினாசி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அவினாசி ரோடு கிளை தலைவர் சாராதா மணி தலைமை தாங்கினர், 

இதில் விஜயலட்சுமி, நந்தகுமார் உள்பட ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

இதேபோல் கோவை-திருச்சி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ், துளசிதரன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதேபோல் டாடாபாத், வடகோவை, ஆர்.எஸ்.புரம், போத்தனூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்