புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சையில் யாரும் இல்லை
புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சையில் யாரும் இல்லை.
புதுச்சேரி, மார்ச்.10-
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 479 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் புதுச்சேரியை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது 27 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். ஆஸ்பத்திரிகளில் யாரும் சிகிச்சையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 3 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பரவல் 0.21 சதவீதமாகவும், குணமடைவது 98.80 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 144 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,159 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 45 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 880 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.