செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா

செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

Update: 2022-03-10 15:15 GMT
செங்கல்பட்டில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. செங்கல்பட்டை ஆண்ட விஜயநகர அரசர்கள் காலத்தில் அதாவது கி.பி 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருத்தலம் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கான பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. சிவாச்சாரியர்கள் வேத மங்கிரங்கள் முழங்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) சூரியபிரபை, நாளை(வெள்ளிக்கிழமை) பூதவாகனம், நாளை மறுதினம் நாக வாகனம், 13-ந்தேதி அதிகாரநந்தி, 14-ந் தேதி 63 மூவர் திருவிழா, 15-ந்தேதி மரத்தேர், 16-ந்தேதி தொட்டி பல்லாக்கு, 17-ந்தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு, I8-ந்தேதி நடராஜன் உற்சவம், 18-ந்தேதி தீர்த்தவாரி என 10 நாட்கள் விழா நடைபெறும் இதனை தொடர்ந்து திருக்கல்யாண திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வாளர் பாஸ்கர், தக்கர் குமரன், செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்