கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா

திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-03-10 18:30 GMT
திருவெண்காடு:-

திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கல்யாண ரெங்கநாதர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே திருநகரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு திருமங்கையாழ்வார் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். மேலும் இந்த பகுதியை சுற்றி பஞ்ச நரசிம்மர் கோவில்கள் உள்ளன. ஹிரண்ய நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர் சன்னதி இந்த கோவிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனை ஒட்டி கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மேளம் தாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. 

திரளான பக்தர்கள்

பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், திருவேடுபரி உற்சவ கமிட்டி தலைவர் ஆளவந்தார், செயலாளர் ரகுநாதன், பொருளாளர் ரெங்கராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்