ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.4 கோடியில் 20 புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட முடிவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.4 கோடியில் 20 புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நாகராஜி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2022-23 ம் ஆண்டு மாநில நிதி குழு ஊராட்சி மானிய நிதியில் இருந்து ரூ.4 கோடி மதிப்பீட்டில் 20 புதிதாக பள்ளி கட்டிடங்கள் கட்டுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.