கிணற்றில் தவறி விழுந்த பட்டதாரி பெண் பலி
ஆரணி அருகே கிணற்றில் தவறி விழுந்த பட்டதாரி பெண் பலி
ஆரணி
ஆரணியை அடுத்த சிறுமூர் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வரதனின் மகள் சந்தியா (வயது 21). இவர் குன்னத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அவர், நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது தாய் வசந்தா நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்.
ஆடுகள் அங்குள்ள ஒரு கிணற்றின் அருகே செல்லவே சந்தியா ஆடுகளை தடுத்து விரட்ட முயன்றபோது கால் தவறி சந்தியா கிணற்றில் விழுந்தார். தாய் வசந்தா ஓடி வந்து மகளை காப்பாற்ற முடியாமல் தவித்தார். எனினும், சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வரதன் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தியாவுக்கு திருமணம் செய்து வைக்க 3 மாதங்களுக்கு முன்பு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என அவர் கூறி உள்ளார்.