ஓசூர் அருகே கடன் தர மறுத்த மூதாட்டியை தாக்கியவா் கைது

ஓசூர் அருகே கடன் தர மறுத்த மூதாட்டியை தாக்கியவா் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-10 12:03 GMT
ஓசூர்:
கர்நாடக மாநிலம் சர்ஜாபுரத்தைச் சேர்ந்தவர் அன்னபூர்ணா (வயது 72). இவர் முகுலப்பள்ளியில் தோட்டம் அமைத்து கேரட் பயிரிட்டுள்ளார். அவரது தோட்டத்தில் கே.என்.தொட்டியை சேர்ந்த நடராஜ் (39) என்பவர் வேலை செய்து வந்தார்.
அவர், அன்னபூர்ணாவிடம் 1 லட்சம் ரூபாய் கடனாக கேட்டார். அதற்கு, மூதாட்டி தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜ், அன்னபூர்ணாவை தாக்கினார். இது குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்