வேலூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-10 11:48 GMT
வேலூர்

வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். சம்மேளன நிர்வாகிகள் கர்ணன், வேல்முருகன், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் பரசுராமன், டாஸ்மாக் ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு சுழற்சிமுறை பணியிட மாறுதல் உருவாக்கி அமல்படுத்த வேண்டும், முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாட்டு செலவு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மேல்முறையீடு செய்யாமலும் சட்டத்திருத்தம் செய்யாமலும் மதுக்கூடங்களை மூட வேண்டும், டாஸ்மாக் கடை நிர்வாகத்தில் தலையிடும் மதுக்கூடதாரர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்