தென்காசி:
குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். பட்டய தலைவர் டாக்டர் மூர்த்தி, தொழில் அதிபரும், ஓணம் பீடி உரிமையாளருமான ஒய்.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் தங்கம் மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். ஏழைகளுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டநகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்து. நல்லமுத்து வாழ்த்தி பேசினார். சங்க முன்னாள் தலைவர்கள் ஆடிட்டர் நாராயணன், தேவராஜ், வெங்கடேஸ்வரன் மற்றும் சண்முகசுந்தரம், நாகராஜன், ரணதேவ், தனராஜூ, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.