உலக மகளிர் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
உலக மகளிர் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூரை அடுத்த சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா, 3-ம் ஆண்டு மாணவிகளுக்கு பிரிவுபசார விழா நடந்தது. கல்லூரி நிர்வாக இயக்குனர் வெள்ளத்தாய், முதல்வர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி தலைவர் வெள்ளத்துரை பாண்டியன் மாணவிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாக இயக்குனர் வெள்ளத்தாய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி உதவி தலைவர் பிரகாசவல்லி சுந்தர் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர். மகாத்மா காந்தி தேசிய கவுன்சிலின் ஊரக கல்வி இயக்கத்தின் சார்பாக மு.பூபால், வியாசா கல்லூரியை பார்வையிட்டார். பின்னர் கல்லூரி பசுமை, சுத்தம் நிறைந்ததாக உள்ளதாக கூறி பாராட்டினார்.