மாநிலங்களவை தேர்தலில் மீண்டும் போட்டி எங்கே-மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதில்

மாநிலங்களவை தேர்தலில் மீண்டும் போட்டி எங்கே-மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதில்

Update: 2022-03-09 21:57 GMT
பெங்களூரு: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டேன். எனது இந்த எம்.பி. பதவி காலம் வருகிற ஜூன் மாதம் நிறைவடைகிறது. நான் மீண்டும் தென்இந்தியாவில் இருந்து மாநிலங்களவைக்கு செல்ல விரும்புகிறேன். ஆனால் நான் எங்கு போட்டியிடுேவன் என்பது எனக்கு தெரியாது. இதை கட்சி தலைமைக்கு விட்டு விடுகிறேன். என்னை கட்சி எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு நான் போட்டியிடுவேன்.
நான் மீண்டும் கர்நாடகத்தில் ஏன் போட்டியிடக்கூடாது?. கர்நாடகம் அழகான மாநிலம். கர்நாடகத்திற்காக பணியாற்றுவதை கவுரமாக கருதுகிறேன். ஒரு எம்.பி.யாக மட்டுமின்றி. கர்நாடகத்தின் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உள்ளது. ஏனென்றால் இங்கு பல்வேறு நல்ல விஷயங்கள் உள்ளன. மாநிலங்களவையில் கர்நாடகத்தின் பிரதிநிதியாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் செய்திகள்