வக்கீலை தாக்கிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பாளையங்கோட்டை அருகே வக்கீலை தாக்கிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-03-09 21:53 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் பகுதியை சேர்ந்தவர் மணி கணேஷ் (வயது 45). வக்கீலான இவர் சம்பவத்தன்று கே.டி.சி. நகர் பகுதியில் சென்றபோது அங்கு வந்த நொச்சிகுளம் காலனி தெருவை சேர்ந்த பெருமாள் என்ற செல்வம் (34), டவுன் சொக்கட்டான் தோப்பு மேலத்தெருவை சேர்ந்த ராஜபாண்டி (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து மணி கணேசை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. ]

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பெருமாள் உள்ளிட்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் ஏற்று பெருமாள் உள்ளிட்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அதற்கான உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சிறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தார்.


மேலும் செய்திகள்