சாலைப்பணியாளர்கள் போராட்டம்

சாலைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-09 21:35 GMT
மணப்பாறை
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் மணப்பாறை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகே சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். உதவி கோட்டப் பொறியாளரின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டிப்பது, சாலைப் பணியாளர்களை தொலைதூர பணிக்கு அனுப்பி பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், பொது சேமநலநிதி முன்பணம் பெறுவதற்கு லஞ்சம் பெறுவதை கண்டிப்பது, சாலைப் பணியாளர்களை தரக்குறைவாக பேசிவரும் சாலை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்