விவசாய உபகரணங்கள் வாங்க மானியம் 75 சதவீதமாக உயர்த்தப்படும்-மந்திரி பி.சி.பட்டீல்
விவசாய உபகரணங்கள் வாங்க மானியம் 75 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சித்துநாமேகவுடா கேட்ட கேள்விக்கு விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பதிலளிக்கையில் கூறியதாவது:-
இந்த ஆண்டு மத்திய அரசு கர்நாடகத்திற்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆயினும் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வாங்க மானியம் அதிகரிக்கப்படுகிறது. அதாவது தற்போது உபகரணத்தின் விலையில் 40 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த மானியத்தை 75 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசு தனது நிதியிலேயே இந்த மானிய திட்டத்தை செயல்படுத்தும். விவசாய உபகரணங்கள் வாங்க படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.