‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-09 20:41 GMT
தெருவிளக்கு ஒளிருமா? 
அந்தியூர் அருகே சங்கராபாளையத்தில்  தெருவிளக்கு ஒன்று கடந்த 2 மாதங்களாக உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த தெருவிளக்கு எரியவும் இ்ல்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தெருவில் நடமாட முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே தெருவிளக்கு ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரவீந்திரன், புதுப்பாளையம்.

 வர்ணம் பூச வேண்டும்
கோபியில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்று கிட்டா சாமி வீதி. இந்த வீதியின் தொடக்கத்தில் வேகத்தடை  உள்ளது. ஆனால் இந்த வேகத்தடையில் வர்ணம் எதுவும் பூசப்படவில்லை. இதனால் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். எனவே வேகத்தடை மீது வர்ணம் பூச சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கோபி. 

ஆபத்தான குழி
ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே.ரோட்டில் சாக்கடை கால்வாய் தரை பாலம் உடைந்து ஆபத்தான குழியாக காட்சி அளிக்கிறது. இதில் பலர் விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே ஆபத்தான இந்த குழியை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், ஈரோடு.

தார் சாலையாக மாற்றப்படுமா? 
கோபி டவுன் பகுதியில் இருந்து வாய்க்காலுக்கு செல்லும் ரோட்டில் உள்ள கல் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் காற்று அடிக்கும்போது ரோட்டில் உள்ள மண் மற்றும் புழுதி பறந்து வந்து இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களின் கண்கள் மீது விழுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் புழுதிகள் பறந்து அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது தூசு படர்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி வாய்க்கால் ரோட்டை தார் சாலையாக மாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். 
பொதுமக்கள், கோபி. 

தேங்கி நிற்கும் கழிவுநீர்
நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சி 12-வது வார்டுக்கு உள்பட்ட பெருமாள் கோவில் வீதியில் உள்ள சாக்கடை வடிகாலில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எலத்தூர்.


வேகத்தடை அமைக்கப்படுமா?
ஈரோட்டில் இருந்து பழனி செல்லும் ரோட்டில் உள்ள கிராமம் சில்லாங்காட்டுப்புதூர். இங்கு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் ரோட்டை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இது முக்கியமான சாலையாக இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி வேகமாக செல்கின்றன. இதனால் மாணவ- மாணவிகள் ரோட்டை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பள்ளி மாணவ- மாணவிகள் ரோட்டை கடக்க வசதியாக அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். 
பொதுமக்கள், சில்லாங்காட்டுப்புதூர்.


ஆபத்தான மின்கம்பம் 
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் 2-வது வீதியில் ஒரு மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சிவகுமார், ஈரோடு.

மேலும் செய்திகள்