குளத்தில் மூழ்கி ஓட்டல் தொழிலாளி பலி

குளத்தில் மூழ்கி ஓட்டல் தொழிலாளி பலியானார்.

Update: 2022-03-09 20:25 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் சமஸ்தான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 38). இவர் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்தநிலையில், இவர் நேற்று மாலை சீதளி குளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, போலீசார், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர் குளத்தில் இருந்து அக்பர் அலி உடலை மீட்டனர். மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்பர் அலி நேற்று முன்தினம் குளத்தில் குளிக்கும்போது மூழ்கி இறந்து இருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்