நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

பூவந்தி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது

Update: 2022-03-09 20:24 GMT
திருப்புவனம்
திருப்புவனம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பூவந்தி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக கிராம மக்கள்  கோரிக்கை விடுத்து வந்தனர். சுமார் 1000 ஏக்கர் பாசன வசதி உள்ள பூவந்தி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாத காரணத்தால் மதுரை மாவட்டத்திற்கு சென்றுதான் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்து வந்தனர். இதனால் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் பூவந்தி ஊராட்சி தலைவர் விஜயா ஆறுமுகம், கவுன்சிலர் மீனாட்சி மணிகண்டன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் பன்னீர்செல்வம் ஆகியோர் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கபட்டு நேற்று பூவந்தி ஊராட்சியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. நெல் எந்திரத்திற்க்கு மாலை அணிவித்து பூஜை செய்யபட்டு தொடங்கி வைக்கப்பட்டது. கிராம மக்கள் சார்பில் அனைவருக்கும் விவசாயிகள் இனிப்புகள் வழங்கினர். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் சக்திவேல், அய்யம்பாண்டி, மூர்த்தி, மாயழகு, சதிஸ்குமார், கவிமாலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்