சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் சண்முகக்கனி (வயது 40). இவருக்கு விபத்து ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்முகக்கனியின் மனைவி ராசாத்தியம்மாள் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ராசாத்தியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.