சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 19). இவர் 15 வயது சிறுமியிடம் தொலைபேசியிலும், நேரில் சந்தித்தும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.