618 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

பிச்சாவரத்தில் 618 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

Update: 2022-03-09 19:11 GMT
பரங்கிப்பேட்டை, 
பிச்சாவரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் 21 ஆயிரம் ஆமை முட்டைகளை சேகரித்து, அதனை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர். இதில் 618 முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியே வந்தன. 
இந்த ஆமை குஞ்சுகளை அண்ணாமலை பல்கலைக்கழக உயிரின உயர் ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் கலைச்செல்வன், பேராசிரியர்கள் சரவணகுமார், சவுந்தரபாண்யன், கல்லூரி மாணவர்கள், வனவர் அருள்தாஸ் மற்றும் வனக்காப்பாளர்கள் கடலில் விட்டனர். 

மேலும் செய்திகள்