கார் மோதி வாலிபர் படுகாயம்

கார் மோதி வாலிபர் படுகாயம்

Update: 2022-03-09 19:09 GMT
கமுதி
முதுகுளத்தூர் சரகத்திற்கு உட்பட்ட கீழசெல்வனூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் சரவணன். இவர் தனது காரில் கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த விருதுநகர் மாவட்டம் கீழபரளச்சியை சேர்ந்த மகாலிங்கம்(36) மீது மோதியது. இதில் மகாலிங்கம் படுகாயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மகாலிங்கம் கமுதி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சரவணன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்