சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொண்டி
தொண்டி ஓடாவி தெருவைச் சேர்ந்தவர் முகமது ஜப்ரான் (வயது 29). இவர் தொண்டி போலீஸ் நிலையத்திற்கு சிலருடன் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம், ஏன் எனது நண்பர் தமீம் அன்சாரி கொடுத்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டு ராமகிருஷ்ணனின் கையை பிடித்து தள்ளி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.