தமிழ்நாடு வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் தமிழ்நாடு வாழ்வுாிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-09 19:07 GMT
வந்தவாசி

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோருக்கு வீட்டுமனை வழங்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்துக்கு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலர் எ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலர் வே.முத்தையன் கண்டன உரையாற்றினார். 

நிர்வாகிகள் ரா.தங்கராஜ், எம்.வெங்கடேசன், ஈ.சுப்பிரமணி, எ.ஆரிப், டி.எம்.ரசூல், கே.செய்யது, ஆர்.அசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்