பொன்னமராவதி அருகே போர்வெல் லாரி கவிழ்ந்து விபத்து; 2 பேர் காயம்

போர்வெல் லாரி கவிழ்ந்து விபத்து; 2 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-03-09 18:55 GMT
பொன்னமராவதி:
திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் பொன்னமராவதி பகுதியில் தங்கியிருந்து போர்வெல் மூலம் சுற்றுவட்டார பகுதியில் போர் போட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் பொன்னமராவதியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் போர்வெல் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கரூரை சேர்ந்த மணி, ராம் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  லாரி டிரைவர் மருததுரை காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கவிழ்ந்த போர்வெல் லாரியால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போர்வெல் லாரியை 2 கிேரன் உதவியுடன் மீட்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்