வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-03-09 18:46 GMT
பொன்னமராவதி:
பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட கிளை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திருமயத்தில் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய வேண்டும். வருவாய்த்துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ேகாஷம் எழுப்பினர். இதில் மாவட்ட இணை செயலாளர் துரை மற்றும் அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.  

மேலும் செய்திகள்