கியாஸ் சிலிண்டர் வெடித்து கர்ப்பிணி, சிறுமி பலி

யவத்மாலில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் கர்ப்பிணி மற்றும் அவரது மகளான 5 வயது சிறுமி பலியாகினர்.

Update: 2022-03-09 18:34 GMT
கோப்பு படம்
யவத்மால், 
யவத்மாலில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் கர்ப்பிணி மற்றும் அவரது மகளான 5 வயது சிறுமி பலியாகினர். 
கியாஸ் கசிவு
யவத்மால் மாவட்டம் ஆயிட்டா கிராத்தை சேர்ந்தவர் காஜல் ஜெய்ஸ்வால் (வயது30). கர்ப்பிணி. இவரது வீட்டில் அவரது 5 வயது மகள், மாமியார் இருந்தனர். நேற்று காலை 7.30 மணி அளவில் வீட்டில் இருந்த மாமியார் சமையல் செய்து கொண்டிருந்தார்.  அப்போது பாத்திரத்தில் சூடாகி இருந்த எண்ணெய் கியாஸ் சிலிண்டர் பைப்பில் விழுந்தது. இதனால் அந்த பைப் உருகி கியாஸ் கசிவு ஏற்பட்டது. 
இதனை கண்ட மாமியார் அங்கிருந்த 5 வயது பேத்தியை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். 
தாய், மகள் பலி
ஆனால் வீட்டில் காஜல் ஜெய்ஸ்வால் இருந்ததால் தனது தாயை  அழைத்து வர சிறுமி வீட்டிற்குள்ளே சென்றாள். அப்போது  கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் காஜல் ஜெய்ஸ்வால், சிறுமி பலத்த தீக்காயமடைந்தனர். 
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். காயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர் வரும் வழியிலேயே தாய், மகள் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
 இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்