அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் மகளிர் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் கண்ணன் தலைமை தாங்கி ேபசுகையில், பெண் கல்வி, பெண்ணுரிமை, பெண்களின் பாதுகாப்பு, சமுதாய மாற்றத்தில் பெண்களின் பங்கு மற்றும் பெண் முன்னேற்றம் தொடர்பான கருத்துக்களை கூறினார். விழாவில் அத்தி, மாங்கன்று, கொய்யா, பலா, தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி ஹசீனா பானு நன்றி கூறினார்.