பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-03-09 18:20 GMT
பெரியகுளம்: 

பெரியகுளம் தென்கரை வராக நதிக்கரையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர தேர் திருவிழா வருகிற 17-ந் தேதி மாலை நடைபெறுகிறது. 

விழாவையொட்டி நேற்று காலை கோவில் வளாகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா, கோவில் திருப்பணி குழுவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி தினமும் சாமி வீதி உலா நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் நரசிம்மன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்