திண்டிவனம் மயிலம் பகுதியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
திண்டிவனம் மயிலம் பகுதியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
திண்டிவனம்
அமைச்சர் செஞ்சி மஸ்தான்
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சீதாபதி சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், துணை தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் அக்சிலியம் பெலிக்ஸ் வரவேற்றார்.
விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு பெண் சாதனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். விழாவில் மாவட்ட கவுன்சிலர்கள் மனோ சித்ரா, எழிலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, சீதாலட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலர் சாந்தி, சாரம் ஒன்றிய கவுன்சிலர் ஜெகதீஸ்வரி, ஊராட்சி தலைவர் வனஜா, ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ராஜ்குமார், வட்டார மேற்பார்வையாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மயிலம் தமிழ் கல்லூரி
மயிலம் தமிழ் கலை, அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
இதில் விழுப்புரம் வக்கீல் சங்க இணை செயலாளர் தேவிகா சிறப்புரையாற்றினார். கல்லூரி துணை பேராசிரியர்கள் அனுராதா, முத்துலட்சுமி, சுபஸ்ரீ, கனிமொழி, சுதா உட்பட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.