வளவனூரில் பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி கூட்டம்
வளவனூரில் பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி கூட்டம்
வளவனூர்
வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி கூட்டம் பேருராட்சி தலைவர் மீனாட்சி ஜீவா தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் பள்ளி கட்டிடம் மற்றும் மாணவர்களின் தரத்தை உயர்த்துவது, பள்ளி நிர்வாகம் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வழி முறைகள் குறித்து பேசினார்கள்.
இதில் இணைப்பு பள்ளிகள் வளவனூர் கிழக்கு, வளவனூர் மேற்கு, குடுமியான்குப்பம், வி.தொட்டி, பக்கமேடு, சாலயாம்பாளையம் ஓட்டேரிப்பாளையம், தாதம்பாளையம், பனங்குப்பம் கல்லப்பட்டு, சகாதேவன் பேட்டை, பி.மேட்டுப்பாளையம் உள்பட 11 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜு ஒருங்கிணைத்தார்.