போலீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 519 பேருக்கு பணி நியமன ஆணை

தர்மபுரியில் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 519 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2022-03-09 17:44 GMT
தர்மபுரி:
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 519 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை கலந்து கொண்டு போலீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 145 பெண்கள் உள்பட 519 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பணி நியமன ஆணைகள் பெற்ற ஆண்கள் சேலம் போலீஸ் பயிற்சி மையத்திற்கும், பெண்கள் மேட்டூர் போலீஸ் பயிற்சி மையத்திற்கும் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்