திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2022-03-09 17:30 GMT
கரூர்
கரூர், 
பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில் திருப்பூர் மண்டல அளவிலான திறனாய்வு போட்டி கவுண்டம்பாளையத்தில் உள்ள கரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகினர்.   வெற்றி பெற்ற மாணவர்களை மாநில அமைப்பு ஆணையர் கமலக்கண்ணன், கோமதி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். முடிவில் கரூர் மாவட்ட சாரண செயலர் ரவிசங்கர் நன்றி கூறினார்.  இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மண்டல பொறுப்பாளர் பிரியா செய்திருந்தார்.

மேலும் செய்திகள்