பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-03-09 15:39 GMT
ஊட்டி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள கடைகளில் நீலகிரியில் விளையும் ஸ்ட்ராபெரி, பிளம்ஸ் உள்ளிட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த பழங்கள் தடை செய்த பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதாக கலெக்டருக்கு புகார் வந்தது. அதன் பேரில் ஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரிகள் தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள கடைகளுக்கு சென்று திடீரென ஆய்வு செய்தனர். 

இந்த ஆய்வில் தடை செய்த பிளாஸ்டிக் கவர்கள் ஒரு கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பழங்களை விற்பனை செய்ய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. 

சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்