பந்தலூர் அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பந்தலூர் அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் அருகே அம்மங்காவு பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பாக்கு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உத்தரவின்பேரில் பந்தலூர் தாசில்தார் நடேசன், சேரம்பாடி வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் யுவராஜ், சீஜா, உதவியாளர்கள் கனிமொழி, ராஜேந்திரன், குபேந்திரன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் சாகுபடி செய்த பாக்கு, காபி உள்ளிட்ட பயிர்களை வெட்டி அகற்றியதுடன், அந்த நிலத்தை மீட்டனர்.
அத்துடன் இந்த நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று அங்கு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது.