கிணத்துக்கடவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

செல்போனை பறித்தவர்களை விரைந்து பிடித்த கிணத்துக்கடவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.

Update: 2022-03-09 14:40 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மனைவி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மனைவியை பார்க்க சோமசுந்தரம் வந்தார். 

பின்னர் மதுரை திரும்புவதற்காக கோவில்பாளையம் பஸ்நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள், சோமசுந்தரத்தின் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதற்கிடையில், அப்பகுதியில் ஆல்பா வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அழகிரிசாமி, துரிதமாக செயல்பட்டு செல்போனை பறித்து சென்ற 3 பேரை மடக்கி பிடித்தார். 

இதையடுத்து துரிதமாக செயல்பட்டு, செல்போன் பறித்தவர்களை கைது செய்த அழகிரிசாமியை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

மேலும் செய்திகள்