உக்ரைனில் இருந்து கடையநல்லூர் வந்த மாணவர்களுக்கு வரவேற்பு
உக்ரைனில் இருந்து கடையநல்லூர் வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடையநல்லூர்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால், அங்கு தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பயின்று வந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஜியாத், கன்ஷூல்லாஹ், அப்துல் அஜீம், ஆசாத், பயாஸ் ஆகிய 5 பேரும் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு வந்தனர். அவர்களை குடும்பத்தினர் இனிப்பு வழங்கி வரவேற்று மகிழ்ந்தனர்.
மேலும் கடையநல்லூர் நகரசபை தலைவர் ஹபிபுர் ரஹ்மான், துணை தலைவர் ராசையா, கவுன்சிலர்கள் முகமது அலி, முருகன், அரபா வஹாப் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்.