எல்லீஸ் நகா், அலங்காநல்லூரில் இன்று மின்தடை

எல்லீஸ்நகர், அலங்காநல்லூர் பகுதிகளில் இன்று(புதன்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-03-08 21:49 GMT
மதுரை, 

எல்லீஸ்நகர், அலங்காநல்லூர் பகுதிகளில் இன்று(புதன்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.

எல்லீஸ்நகர்

மதுரை தெற்கு கோட்டம் எல்லீஸ்நகா் துணை மின்நிலையத்தில் இன்று(புதன்கிழமை) மாதாந்திர பராமாிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அந்த துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட எல்லீஸ் நகா் மெயின் ரோடு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், போடி லைன், கென்னட் கிராஸ் மற்றும் ஆஸ்பத்திாி ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகா் 1 முதல் 7-வது தெரு, டி.பி. ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சா்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகா், ஹாப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெரு, எஸ்.டி.சி ரோடு, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேசன், வசந்த நகா், பொியார் பஸ் நிலையம், மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திாி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.இத்தகவலை மின்சார செயற்பொறியாளா் மோகன் கூறினார். 
மேலும் மதுைர மேற்கு கோட்டம் அரசரடி துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் குரு தியேட்டர், மஞ்சள்மேடு பழைய காலனி, புதிய காலனி, டிடி ரோடு சில பகுதிகள், வேளாளர் தெரு, கண்மாய்கரை ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் ஏற்படும். இந்த தகவலை மேற்கு பெருநகர் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.

அலங்காநல்லூர்

சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட அலங்காநல்லூர் துணை மின் நிலையம் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. எனவே அலங்காநல்லூர் பகுதிகள், தேசிய சர்க்கரை ஆலை ரோடு, டி.மேட்டுப்பட்டி, பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்ன கவுண்டன்பட்டி, சிறுவாலை, குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையபட்டி, கோவில்பட்டி, வைகாசிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.  இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்