குளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது

குளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 25 பேர் உயிர் தப்பினர்

Update: 2022-03-08 21:12 GMT
செந்துறை
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் கிடாவெட்டு நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்டம் ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் சுமார் 25 பேர் ஒரு டிராக்டரில் வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். துளார் கிராமம் அருகே டிராக்டர் சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்குள்ள குளத்திற்குள் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 25 பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதனை கண்ட கிராம இளைஞர்கள் விரைந்து வந்து அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் அவர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

மேலும் செய்திகள்