மஞ்சுவிரட்டு குறித்து ஆலோசனை கூட்டம்
மஞ்சுவிரட்டு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் புகழ்பெற்றது என்.புதூர் மஞ்சுவிரட்டாகும். இது ஆண்டுதோறும் ஸ்ரீவெள்ளாளன் கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இதன்படி வருகிற 11-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள இம்மஞ்சுவிரட்டுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள். அதனால் முன்னேற்பாடுகள் குறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணை வட்டாட்சியர் செல்லமுத்து வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் சடையாண்டி, கால்நடை துறையினர் மற்றும் என்.புதூர் கிராமத்தினர் சார்பாக வெள்ளாளன் கருப்பர் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர். இதில் மாட்டின் உரிமையாளர்களும் பார்வையாளர்களும் கட்டாயம் 2 தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும் என்றும.் மேலும் மாடுபிடி வீரர்களும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை கொண்டு வந்து மஞ்சுவிரட்டு திடலில் பதிவு செய்துகொணண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் கூறப்பட்டது.