கல்லக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆட்சிக்கண்ணு. இவரது மனைவி சுமதி (37), இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சுமதி பணி நிமித்தமாக தனது ஸ்கூட்டரில் சமயபுரம் சென்றுவிட்டு வீட்டிற்குதிரும்பிசென்றுகொண்டிருந்தார்.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் ெரயில்வே மேம்பாலத்தில் ஸ்கூட்டர் வந்துகொண்டிருந்தபோது, அதே திசையில் திருச்சி நோக்கி சென்ற தனியார் மருத்துவ கல்லூரி பஸ் ஸ்கூட்டர் பின்புறத்தில் மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த சுமதி மீது கல்லூரி பஸ் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ் டிரைவர் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 63) என்பவரை கைது செய்தார்.