மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 2 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 2 பேர் கைது

Update: 2022-03-08 19:13 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 50). இவர் சுமார் 20 ஆடுகளை வளர்தது வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டின் அருகில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு ஆட்டினை காணவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில் பாலமுருகன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆட்டினை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் கடம்பாநகர் பகுதியை சேர்ந்த ராஜா (29) மற்றும் அண்ணாநகரைச் சேர்ந்த சங்கர்(29) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்