ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவி
மகளிர் தின விழாவையொட்டி ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவிகளை பெண் போலீசார் வழங்கினர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் அருமை இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற முதியோருடன் பெண் போலீசார் மகளிர் தின விழாவை கொண்டாடினர். அப்போது செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை வழங்கினர். மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், முதியோர்களுடன் சேர்ந்து மகளிர் போலீசார் மகளிர் தினத்தை கொண்டாடினர். இதேபோல மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளர் முத்துக்குமரன் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மின் வாரியத்தில் பணியாற்றும் அனைத்து பெண்களும் கலந்து கொண்டனர்.