ஆறுமுகசுப்ரமணியசாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு

ஆறுமுகசுப்ரமணியசாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு

Update: 2022-03-08 19:01 GMT
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே பழையனூர் காக்கையாடியில் ஆறுமுகசுப்ரமணியசாமி கோவில் உள்ளது. வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் இக்கோவிலில் நேற்று கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இதில், சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்